#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா..! ஓப்பனிங்கே செம..! முதல் படத்திலேயே இத்தனை லட்சம் சம்பளமா..? அசத்தும் லாஷ்லியா.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்று மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கை தமிழ் பெண் லாஷ்லியா. நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதிவரை இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ஒரு செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் போட்டியின் சில நாட்களிலையே பெரும்பாலான இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்து கனவு கன்னியாக வளம் வர தொடங்கினார். எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்தாலும் கவினுடன் ஏற்பட்ட காதல் கிசுகிசுவில் சிக்கி சற்று பெயரையும் டேமேஜ் செய்துகொண்டார்.
ஒருவழியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவர் தற்போது சினிமாவில் நாயகியாக வளம் வர தொடங்கியுள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் ஹீரோவாக நடிக்கும் ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் லாஷ்லியா.
தற்போது விஷயம் என்வென்றால் தான் நாயகியாக நடிக்கும் முதல் படத்திலையே பல லட்சங்களில் சம்பளம் வாங்க தொடங்கிவிட்டாராம் லாஷ்லியா. ஆம், ப்ரெண்ட்ஷிப் படத்திற்காக லாஷ்லியா வாங்கும் சம்பளம் 25 லட்சம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
சம்பளம் இல்லாட்டியும் பரவால்ல, சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காத என புதுமுக நடிகைகள் பலரும் ஏங்கிவாரும் நிலையில் லாஷ்லியா முதல் படத்திலையே 25 லட்சம் சம்பளம் வாங்குவதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.