உடல் எடை குறைத்து மீண்டும் ஹீரோயின் போல் மாறிய பிக்பாஸ் ஷெரீன்! புகைப்படம் இதோ.



bigg-boss-sherin-latest-photos

நடிகர் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்விகமாக கொண்ட இவர் கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 18 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நண்பேன்டா படத்தில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாக இவர் சமீபாத்தில் வெளியான பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

Sherin

போட்டியின் இறுதிவரை சென்ற அவர் நான்காவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது சற்று வயதான தோற்றத்தில், சற்று உடல் எடை கூடி வந்த ஷெரின் வீட்டில் இருந்து வெளியேறும்போது உடல் எடையை குறைத்திருந்தார்.

தற்போது மேலும் ஒருபடியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஷெரீன் தன் உடல் எடை அனைத்தையும் குறைத்து செம்ம ஸ்லீம் ஆகிவிட்டார். இவரது சமீபத்திய புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் ஷெரின் மீண்டும் ஹீரோயின் ஆயிடுவார்போல என கமெண்ட் செய்துவருகின்றனர்.