96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிகில் இந்த படத்தின் ரீமேக்கா? உண்மையை போட்டுடைத்த அர்ச்சனா கல்பாத்தி!
ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஆஸ்கார் நாயகன் A.R.ரகுமான் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை வெளியான படத்தின் டிரைலர் சில மணித்துளிகள் அதிக லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஒரு சிலர் டிரைலரை பார்த்து விட்டு இந்த படம் சத்தே படத்தின் ரீமேக் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சத்தே படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தான் பிகில் படம் எடுக்கப்பட்டதாக கூறி வருகின்றனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அர்ச்சனா கல்பாத்தி இவ்வாறு கூறியுள்ளார். அதாவது பிகில் படம் சத்தே படத்தின் ரீமேக் இல்லை என்று நாங்கள் எந்த படத்தின் ரீமேக் உரிமையை பெறவில்லை எனவும் கூறியுள்ளார். இவை அனைத்தும் ஒரு வதந்தி எனவும் கூறியுள்ளார்.