96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கிளம்பிய பெரும் பிரச்சினை!! சற்றுமுன் பிகில் பட குழு வெளியிட்ட முக்கிய தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தில் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாவதாக படக்குழு கூறியிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர் பிகில் படம் தன்னுடைய கதை என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால் விஜய் ரசிகர்கள் பிகில் படம் தீபாவளிக்கு வருமா என பெரும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று மாலை 6 மணியளவில் பிகில் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவருகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#BigilReleaseDate at 6:00pm 😊😊😊 #PodraVediya #BigilDeepavali 🔥🔥🔥@actorvijay @Ags_production @Atlee_dir @arrahman #Nayanthara
— Archana Kalpathi (@archanakalpathi) October 17, 2019