பாலிவுட் இயக்குனர் திரைப்படத்தில் நடிக்க மறுத்த விக்ரம்.. யூடியூபில் விக்ரமை குறித்து சர்ச்சையான பேட்டி அளித்த இயக்குனர்.?



Bollywood director interview

பாலிவுட்டில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் என பல திறமைகளைக் கொண்டவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருக்கிறார்.

vikram

இவர் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்று வருகிறார். அனுராக் காஷ்யப் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார்.

இதுபோன்ற நிலையில், யூடியூபில் ஒரு பேட்டியில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்பட்ட 'கென்னடி' திரைப்படத்தில் முதலில் நடிகர் விக்ரமை நடிப்பதற்காக அணுகினோம். ஆனால் அவரை தொடர்பு கொண்டதற்கு எந்தவித பதிலும் அவர் அளிக்கவில்லை. என்பதால் இப்படத்தை வேறு ஒரு நடிகரை கதாநாயகனாக வைத்து இயக்கினேன் என்று இயக்குனர் அனுராக் காஷ்யப் பேட்டி அளித்திருக்கிறார்.

vikram

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த விக்ரம் நீங்கள் என்னை தொடர்பு கொண்டது சில நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நீங்கள் தொடர்பு கொண்ட என்னை சில வருடங்களுக்கு முன்பாகவே மாற்றி விட்டேன். நாம் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து வேலை செய்வோம். கென்னடி திரைப்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று ட்விட்டர் பதிவு எழுதியிருந்தார். இப்பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.