மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சந்திரமுகியாக தமிழ் சினிமா ரசிகர்களை கலக்கவரும் கங்கனா ரனாவத்.. அதிகாரப்பூர்வ தகவலால் எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்.!
கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், நாசர், வினீத், மனோபாலா ஆகியோரின் நடிப்பில், வாசுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற சந்திரமுகி ஆண்டுகளை கடந்தும் அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது.
இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கடந்தபின், சந்திரமுகி 2 குறித்த பேச்சுக்கள் எழுந்தது. நடிகர் ராகவா லாரன்ஸ் - பி. வாசு கூட்டணியில் ஏற்கனவே வெளியாகியிருந்த சிவலிங்கா திரைப்படம் நடுத்தர வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இருவரும் சந்திரமுகி 2ம் பாகத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் வடிவேலு, ராகவா லாரன்ஸ் உட்பட பலரும் சந்திரமுகி 2ம் பாகத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் சந்திரமுகி வேடத்தில் யார் நடிக்கப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடிக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த தகவலை நடிகை கங்கனா ரணாவத் உறுதி செய்துள்ளார். இது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.