பிரபல காமெடி நடிகர் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் - வெளியான புதிய அப்டேட்!
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகர்களின் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் சூரி. படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா சீன் இன்றுவரை பிரபலமாக உள்ளது. இந்த ஒரு காட்சிதான் இன்று இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணம். வடிவேலு அவர்கள் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு அவரது இடத்திற்கு வந்துவிட்டார் பரோட்டா சூரி.
ஆனால் தற்போது சூரி நடிகராக புதிய அவதாரம் ஒன்றை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படம் முடிவடைந்ததையடுத்து, தற்போது சூரியை ஹீரோவாக வைத்து படம் எடுக்கவுள்ளதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.