பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முக்கிய பிரபலம்!! செம குஷியான போட்டியாளர்கள்!! வீடியோ இதோ..



cheran-re-entry-in-bigboss-house

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். 

கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் பிக்பாஸ் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார். 

bigboss

இந்நிலையில் நேற்று முதல் பிக்பாஸ்ஸில் புதிய டாஸ்க் தொடங்கப்பட்டது. அதில் போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருகை தரவுள்ளனர். அதன்படி நேற்று முகேனின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர். அதனால் போட்டியாளர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இவ்வாறு வீட்டில் நடக்கும் அனைத்தையும் சீக்ரெட் ரூமில் இருந்து சேரன் கவனித்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்றும் அனைத்து போட்டியாளரும் யார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரவுள்ளனர் என பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் சீக்ரெட் ரூமில் இருந்த சேரன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார். இதனை கண்ட போட்டியாளர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பிரமோ வீடியோ வைரலாகி வருகிறது.