96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போட்டியாளர்கள்.!! வெளியான தகவலால் குஷியில் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது வெற்றிகரமாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களிடம் குறைவான வாக்குகளைப் பெற்றவர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இதுவரை எலிமினேட் செய்ய பட்டு வெளியே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் அந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒரு வாரம் பிக்பாஸ் வீட்டில் தங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மீண்டும் வரும் போட்டியாளர்களில் அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல மாட்டார் என தெரிகிறது. இதற்கு அனிதா சம்பத் தந்தையின் மரணம் கூட காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனால் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கவிருக்கும் சுவாரஸ்யத்தை காண்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.