நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
குக் வித் கோமாளியில் ஏன் பங்கேற்கவில்லை? - மனம்திறந்த ரக்சன்.. இதுதான் விஷயமா?.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். அந்த வகையில், குக் வித் கோமாளி என்று தொடங்கப்பட்ட சமையல் நிகழ்ச்சியானது மூன்றாவது சீசன் வரை சென்றுள்ளது.
முதல் சீசனுக்கு மாபெரும் வெற்றி மக்களிடையே கிடைத்த நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனிலும் அதே வெற்றி கிடைத்துள்ளது. அதனைப்போல, முதல் சீசனில் இருந்து இரண்டாவது, மூன்றாவது சீசன் செல்லும்போது போட்டியாளர்கள் மாற்றப்பட்டனர். கோமாளிகள் மற்றும் நடுவர்கள், தொகுப்பாளர் என அனைவரும் முதல் சீசனில் இருந்து ஒருங்கே இருக்கின்றனர்.
இதில், தொகுப்பாளருக்கு தொகுப்பாளராகவும், போட்டியாளர்களுக்கு உதவியாளராகவும் பன்முகத்துடன் வலம் வந்த ரக்சன், மூன்றாவது சீசனில் திடீரென காணவில்லை. இந்த விஷயம் குறித்து ரக்சனிடம் கேட்கையில், இறுதி நிகழ்ச்சியின் போது எனக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. கொரோனவோ என சோதனை செய்தால் அதுவும் இல்லை. அதனால் தான் கலந்துகொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.