நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
படத்தில்தான் கொடூர வில்லன்.! நிஜத்தில்.. தனது அம்மாவின் ஆசைக்காக நடிகர் டேனியல் பாலாஜி செய்துள்ளதை பார்த்தீங்களா!! வேற லெவல்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் டேனியல் பாலாஜி. இவர் சித்தி தொடரில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் அவர் வெள்ளித்திரையில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவர் காதல் கொண்டேன், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் போன்ற பல படங்களில் மிரட்டலான வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் டேனியல் பாலாஜி கோவிலுக்கு பெயிண்ட் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் இருக்கும் கோவில் சென்னை ஆவடியில் உள்ள ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். அதனை நடிகர் டேனியல் பாலாஜி பல கோடி செலவு செய்து தனது சொந்த செலவில் கட்டியதாக கூறப்படுகிறது. தனது அம்மாவின் ஆசைக்காக அவர் இந்த கோவிலை கட்டினாராம். இதன் கும்பாபிஷேகம் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றுள்ளது.