குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அசுரனை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது; ரசிகர்கள் உற்சாகம்.!
அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆனது தற்சமயம் துவங்கியுள்ளது.
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வெற்றி பெற்ற படம் வடசென்னை. இப்படத்திற்கு பிறகு இருவரின் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன். இதற்கிடையில் கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் தனுஷின் 39ஆவது படத்தின் படப்பிடிப்பானது குற்றாலத்தில் துவங்கியுள்ளது.
இதிலும் ‘கொடி போலவே தனுஷ் இரு வேடங்களில் நடிக்கிறாராம். இந்தப் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் புதுப்பேட்டை படத்தை இயக்கிய செல்வராகவன் எங்கு சென்றாலும் புதுப்பேட்டை பாகம்-2 எப்போது வெளிவரும் என்று அனைவரும் கேட்பதாக தெரிகிறது. இதுகுறித்து கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ்: ‘உங்களுடைய ஆர்வம் புரிகிறது. ஆனால் முதல் பாகத்துக்கு கொஞ்சமும் குறையாத கதை இருந்தால் தான் இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும். அதற்கான விவாதம் நடந்து வருகிறது’ என்றார்.