குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இது ரொம்ப தப்பு.. திரையரங்கில் ஓடிய வெந்து தணிந்தது காடு படத்தின் பேனரை கிழித்த தனுஷ் ரசிகர்கள்..! கொந்தளிப்பில் சிம்பு ரசிகர்கள்..!!
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று, வசூல் சாதனையும் நிகழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு வெளியான அதே நாளில் தனுஷின் நானே ஒருவன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. இந்த படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் நானே வருவேன் டீசரை திரையரங்கம் ஒன்றில் பிரத்தியேகமாக ஸ்கிரீன் வைத்து திரையிட்டுள்ளனர்.
அங்கு தனுஷ் ரசிகர்கள் டீசர் வெளியீட்டை கொண்டாடியபோது சிலர், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் பேனரை கிழித்துள்ளனர். தனுஷ் ரசிகர்களின் இந்த செயலால் சிம்பு ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
This is how they spread positivity to #Tamil cinema. https://t.co/qmJGaTDcwV
— Hariharan Gajendran (@hariharannaidu) September 17, 2022