குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இணையத்தை தெறிக்கவிடும் ரஜினியின் தர்பார் படத்தின் முதல் பாடல்! சும்மா கிழி பாடல் இதோ!
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். சூப்பர் ஸ்டார் - AR முருகதாஸ் இணையும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தர்பார் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகியுள்ளது.
சும்மா கிழி என தொடங்கும் இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் SPB அவர்கள் பாடியுள்ளார். தர்பார் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சற்றுமுன் வெளியான சும்மா கிழி பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி வைரலாகிவருகிறது. இதோ அந்த பாடல்.