96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பாரதிராஜாவை திட்டிய வடிவுக்கரசி.? செருப்பை கையில் எடுத்த பாரதிராஜா..
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளை படமாக எடுத்து பிரபலமானவர் பாரதிராஜா. 80களில் பாரதிராஜா படம் என்றாலே போட்டி போட்டுக் கொண்டு நடிக்கும் நடிகர்கள் பலர் இருந்தனர்.
1977 ஆம் வருடம் '16 வயதினிலே' எ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாரதிராஜா. முதல் திரைப்படமே வெற்றி படமாக இவருக்கு அமைந்தது. இதன்பின் பல திரைப்படங்கள் இயக்கி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இயக்குனராக திகழ்ந்து வருகிறார்.
இதுபோன்ற நிலையில், நடிகை வடிவுக்கரசி ஒரு பேட்டியில் பாரதிராஜாவை குறித்த சர்ச்சையான கருத்தை தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியதாவது "ஒரு படத்தில் நடிக்க பாரதிராஜா என்னை அழைத்தார். படப்பிடிப்பிற்கு வந்த பிறகு நீ நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.
இதனால் கோபமடைந்த நான், எவ பேச்சை கேட்டுட்டு இப்படி பண்றீங்க என்று கேட்டு விட்டேன். இதற்கு பாரதிராஜா செருப்பை கையில் எடுத்து அவர் தலையிலேயே அடித்துக் கொண்டு கோபமாக கத்தினார். என்று அப்பேட்டியில் நடிகை வடிவுக்கரசி கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.