குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஓ மை கடவுளே பட நடிகை செய்த செயலால் பாத்ரூமை கழுவிய இயக்குனர்.. வெளியான வீடியோவால் பரபரப்பு.!
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருந்து வருபவர் ரித்திகா சிங். இவர் தமிழ், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். பெரும்பாலும் இந்தி மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரித்திகா சிங்.
இது போன்ற நிலையில் 2020ஆம் வருடம் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் போன்றவர்கள் நடிப்பில் வெளியானது ஓ மை கடவுளே திரைப்படம். இப்படம் திரையரங்கில் வெளியாகி பெருதளவில் வெற்றி பெற்றாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இது போன்ற நிலையில் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட ஓ மை கடவுளே படத்தின் இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து என்பவர் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகளை கூறியிருக்கிறார். அதாவது படப்பிடிப்பின் போது ரித்திகா சிங், அவர் சென்ற பாத்ரூம் சரி இல்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும் யாரும் இல்லாத காரணத்தினால் இயக்குனரே சென்று அந்த பாத்ரூமை கழுவினாராம். படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்பதற்காக இதை செய்தேன் என்று பேட்டியில் நகைச்சுவையாக கூறியிருந்தார். ஆனால் இந்த வீடியோ வெளியாகி ரித்திகா சிங்கை பலரும் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.