96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நெத்தியடி கருத்து.... சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக... ஆணித்தரமாக பதிவு செய்த டைரக்டர் பா. ரஞ்சித் !
இன்றைய தலைமுறைய இயக்குனர்களில் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக விளங்கி வருபவர் ரஞ்சித். சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக தனது திரைப்படம் மூலம் அரசியல் பேசி வருபவர் இவர்.
தனது கருத்துக்களை சமூக வலைதளங்களின் வாயிலாக எப்போதுமே பேசி வருபவர். இந்நிலையில் சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி திரௌபதி மும்மூர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் துவக்க விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் ரஞ்சித்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கும் அவர் இந்தியாவின் முதல் ஆதிவாசி ஜனாதிபதி புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படாததை சுட்டிக்காட்டி இருக்கிறார். இது ஜாதியை பாகுபாட்டின் அடிப்படையிலான ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Mockery of Democracy
— pa.ranjith (@beemji) May 25, 2023
New Delhi: In modern, developed and glorious India the BJP promises to establish in the 75th year of Indian Independence - #AzadiKiAmritMahostav, the first Adivasi president of India- Honourable Madam Draupadi Murmur (@rashtrapatibhvn), not invited to grand…
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் சாதி இந்துக்கள் தலித் மக்களை திரௌபதி கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுத்ததையும் சுட்டிக் காட்டி இருக்கும் அவர் எந்தக் கட்சிகள் வந்தாலும் இங்கு சாதிய ஒடுக்குமுறை மாறப் போவதில்லை எனவும் கடுமையாக சாடி இருக்கிறார். கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் தீண்டாமையும் சாதி பாகுபாடும் தொடர்ந்து நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் ரஞ்சித்.