குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இவர்தான் வெற்றிநாயகன்.! ஜிபி முத்துவை புகழ்ந்து தள்ளிய தேசிய விருது வென்ற பிரபல இயக்குனர்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் 6வது சீசனில் 21 போட்டியாளர்களுள் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் ஜி.பி முத்து. இவர் டிக்டாக் மற்றும் சமூக வலைத்தளங்களில் எக்கச்சக்கமான வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவருக்கு முதல் நாளிலேயே பெரும் ஆர்மி உருவானது.
அவர் என்ன செய்தாலும் அதனை ரசிகர்கள் பெருமளவில் ரசித்து வந்தனர். இந்நிலையில் சவாலான போட்டியாளராக இருந்து வந்த ஜி.பி முத்து தனது பிள்ளைகளின் ஞாபகமாக உள்ளது. எனது மகனை பார்க்க வேண்டும் என கதறி அழுது வீட்டை விட்டு வெளியேறினார். பிக்பாஸ், கமல் என யார் சமாதானப்படுத்தியும் அவர் வீட்டை விட்டு வெளியேறுவதிலேயே உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி முத்து தனது பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தேசிய விருது வென்ற இயக்குனரான சீனு இராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம், வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில், உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜிபி முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன் என்ன பாராட்டியுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.
வெற்றி பெற
— Seenu Ramasamy (@seenuramasamy) October 24, 2022
தகுதியான
ஒரு போட்டியாளன்,
அதன் வருமானம்
வெகுமானம்
யாவற்றையும்
பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு
தன் மகனுக்காக
புகழ் வாய்ந்த சபையில்
உலகறிந்த நடிகர் கேட்டும்
கேளாமல் #bigbosstamil6 லிருந்து
விடைபெற்ற
தமிழ்மகன்#GPமுத்து தான் தீபாவளியின்
வெற்றி நாயகன் 💐@ikamalhaasan pic.twitter.com/aKDpK8vKQH