குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
காரிலிருந்து இறங்கி அழுதுகொண்டே ஓடிய நடிகை எமி! ஏன்? என்னாச்சு? காரணத்தை கேட்டு ஆடிப்போன இயக்குனர்!
தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை எமிஜாக்சன். முதன் முதலாக மதராசப்பட்டினம் திரை படத்திற்காகத்தான் நடிகை எமி நாட்டை விட்டு வெளியே வந்துள்ளார். மேலும் அத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் எமி ஜாக்சனுக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் குவியத் துவங்கியது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் விஜய் மதராசபட்டினம் படப்பிடிப்பில் நடைபெற்ற பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ஒருநாள் மவுண்ட் ரோட்டில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. சரியான வெயில். 40 டிகிரி அளவுக்கு இருந்தது. படப்பிடிப்பின்போது திடீரென எமிஜாக்சன் பயங்கரமாக அழுதவாறே காரிலிருந்து இறங்கி ஓடினார். இதனைக் கண்டு படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். மேலும் அப்பொழுது உதவி இயக்குனர் ஓடிவந்து என்னிடம் எமிஜாக்சனின் அம்மாவும் அழுவதாக கூறினார்.
இதனை கேட்டு பதறிப்போய் எமியிடம் சென்று என்ன ஆயிற்று என கேட்டேன். அதற்கு அவர் படப்பிடிப்பிற்காக கொண்டுவரப்பட்ட குதிரை ரொம்ப நேரமாக வெயிலில் நிற்கிறது. அதனை என்னால் பார்க்க முடியவில்லை. நான் அதை தத்து எடுக்க விரும்புகிறேன் என கூறினார். பின்னர் அந்த குதிரையை நிழலான ஷெட் போன்ற பகுதியில் கட்டி வைக்கப்பட்டு தினமும் நல்ல உணவு கொடுத்து தொடர்ந்து கண்காணிப்பதை பார்த்தபிறகே அவர் சமாதானமடைந்தார் என இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.