திடீர் திருமணம் செய்துகொண்டாரா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.? வைரலாகும் புகைப்படம்.!



Does aishwarya rajesh got married viral photo

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கவர்ச்சி, நடனம் இவற்றை தாண்டி, நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து அதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவனித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.  

சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீடு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு திருமணம் முடிந்துவிட்டதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Aishwarya rajesh

அதற்கு முக்கிய காரணம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.  அந்த புகைப்படத்தில் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்திருக்கும் அவர், நெற்றி வகிடிலும் குங்குமம் வைத்துள்ளார். பொதுவாக திருமணம் முடிந்த பெண்கள் மட்டுமே நெற்றி வகிடில் குங்குமம் வைப்பார்கள். 

ஐஸ்வர்யாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?, என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ஐஸ்வர்யா எந்த பதிலும் அளிக்கவில்லை.

View this post on Instagram

#divinevibes ...

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on