நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
தளபதி-68 பள்ளி மாணவராக நடிக்கிறாரா விஜய்? வெளியானது புதிய அப்டேட்.!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் லியோ திரைப்படத்தின் வெற்றியையடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் விஜய் பள்ளி மாணவனாக நடிக்கவிருப்பதால் டிஜிங் என்ற தொழில்நுட்பத்தை தயாரிப்பாளர் தரப்பு பயன்படுத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. அத்துடன் விஜய் தன்னுடைய திரையுலக பயணத்தில் இதுவரையில் பள்ளி மாணவனாக நடித்ததேயில்லையாம். ஆகவே அவருக்கு இந்த திரைப்படத்தில் இதுவரையில் கொடுக்கப்படாத ஒரு தோற்றம் கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகின்றது.
அதேநேரம் லூப்பர் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு தற்போது விஜய் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள ஷெட்யூல் டிசம்பர் மாதம் இறுதி வரையில் நீடிக்கலாம் என்று தெரிகின்றது அதன் பின் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நார்வேயில் நடைபெறவுள்ளது.