96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிகை மாற்றம்?.. குழப்பத்தில் இருந்த ரசிகர்களின் சந்தேகம் தீர்ந்தது..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஈரமான ரோஜாவே முதல் சீசனில் திரவியம் மற்றும் பவித்ரா ஜோடியாக நடித்திருந்தனர்.
இந்த சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த கதைக்களத்திலும் திருமணம் செய்யப்படும் ஜோடிகளை மாற்றி அவர்கள் வாழ்வில் இணைவது தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்தவரும் திரவியம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் படி ரசிகர்கள் பிரியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுவாதி வெளியேறுகிறாரா? என்ற கேள்வியை எழுப்பி வந்தனர்.
இந்தநிலையில், தற்போது இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவர் வெளியேறவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். இதனால் குழப்பத்தில் இருந்த ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.