குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அட.. நடிகை எமி ஜாக்சனா இது! சின்ன வயதில் ஆள் அடையாளமே தெரியாம.. செம க்யூட்டா இருக்காருல! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து எமி தனுஷ், விஜய், விக்ரம், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் எமி ஜாக்சன் கோலிவுட்டில் சூப்பர் கேர்ள் என்ற வெப்சீரிசில் நடித்துள்ளார். இந்தநிலையில் பிரிட்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட எமி திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். மேலும் அவருக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு தனது குழந்தையை கவனித்து வரும் எமி சிறுவயதில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் எமியா இது? சின்ன வயசுல ஆள் அடையாளமே தெரியலையே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.