குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தனது அழகுமகனை கொஞ்சி மகிழும் எமி.! வைரலாகும் கியூட் வீடியோ
தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த மாதம் எமிக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது குழந்தையை கொஞ்சம் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ பெருமளவில் பரவி வருகிறது.