குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தனது கர்ப்பம் குறித்து முதன்முறையாக நடிகை எமி வெளியிட்ட வீடியோ!! ஷாக் ஆன ரசிகர்கள்!!
ஆங்கிலம் கலந்த தமிழில் மதராச பட்டினம் என்ற ஒரே படத்தில் தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். இயக்குனர் AL விஜய் இவரை தேடி பிடித்து மதராசபட்டினம் படத்தில் நடிக்க வைத்தார். முதல் படமே இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது.
அதனை தொடர்ந்து, தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் ரோபோவாக நடித்திருந்தார். இந்த நிலையில், எமி ஜாக்ஸன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருப்பதாக சென்ற வருடம் தகவல் வெளியானது.
இந்தநிலையில் சில நாட்கள் முன்பு எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.
மேலும் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிஸியாக இருக்கும் எமி கர்ப்பமான நிலையிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், முதன்முறையாக தனது கர்ப்பம் குறித்து பேசிய வீடியோ ஒன்றை எமி வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் கர்ப்பமாகி 22 வாரங்கள் ஆகிவிட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.
இவ்வளவு நாட்கள் இதுகுறித்து பேச வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இனி தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால வீடியோக்களை பதிவேற்றுவேன்" என கூறியிருக்கிறார். எமியின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.