குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அதிர்ச்சி! தொடர் சோகம், வாட்ச்மேன் வேலைக்கு செல்லும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?
சினிமா நடிகர்கள் என்றாலே மிகவும் வசதியானவர்களாகத்தான் இருப்பார்கள் என்று நம்மில் பலர் எண்ணுவது உண்டு. ஆனால், என்னதான் பெரிய அளவில் சினிமாவில் நடித்திருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே சிரமப்படும் நடிகர் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பிரபல பாலிவுட் நடிகர் சவி சிது. பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர், அனுராக் காஷ்யப் இயக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சவி சிது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் வாட்ச்மேன் வேலைக்கு செல்கிறார் சவி சிது. இதுபற்றி அவர் கூறுகையில், கடந்த சில காலங்களாக வாய்ப்பு இல்லாததாலும், தனது பெற்றோர், மனைவி அனைவரும் இறந்துவிட்டதால் தொடர்ந்து தனிமையில் வாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அன்றாட வாழ்க்கைக்கே பணம் இல்லை இதனால்தான் இந்த வேலைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் தற்போதும் இருப்பதால், நிச்சயம் பணம் சம்பாதித்து, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டு நடிப்பேன் என கூறியுள்ளார்.