பிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!. ஒட்டுமொத்த ரசிகர்களும் சோகத்தில் பிரார்த்தனை!.



famous actress admitted in icu ward


பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் இந்தியாவில் உள்ள நடிகைகளில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்கிறார். இவர் இது வரை பல இந்தி திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி  இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் அந்த பிரச்னையை இவர் பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள்  ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. 

sratha kapoor

இதனால் மருத்துவர்கள் நடிகையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவச்சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் திரையுலகினர் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

ஷ்ரத்தா கபூர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.