பிரபல இளம் நடிகை தற்கொலை! தொடரும் தற்கொலைகள்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!



famous-cinema-actress-yashika-suicide

சினிமா, தொலைக்காட்சி பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலகில் பிரபல தொலைக்காட்சி நடிகையாக இருந்த ஜான்சி என்பவர் தற்கொலை செய்துகொண்டார். அதன் சோகம் மறைவதற்குள் தற்போது மேலும் ஒரு நடிகை தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல் நடித்த மன்னர் வகையறா என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தவர் யாசிகா. பல தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளதாக கூற படுகிறது. இந்நிலையில்  யாஷிகாவும், 22 வயதான மோகன்பாபு என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

Seriyal actres death

இருவரும் காதலர்கள் என்பதால், திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இடையில் சில பிரச்சனைகளால் மோகன்பாபு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனால்  மனமுடைந்த யாசிகா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு  தனது தாய்க்கு தன்னை ஏமாற்றிய மோகன்பாபுவுக்கு தக்க தண்டனை வாங்கி தர வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை  அனுப்பியுள்ளார் நடிகை யாஷிகா.