பொன்னியின் செல்வனால் தமிழகத்தில் வெடிக்கப்போகும் போராட்டம்.. வரலாற்றை மாற்றம் செய்யாதீங்க - எச்சரித்த பிரபல இயக்குனர்..!!



Famous director warning

தமிழ் வரலாற்றை மையமாகக்கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது. 

இப்படம் குறித்து திரைபிரபலங்கள் பலரும் தங்களது கருத்தினை கூறிவரும் நிலையில், இயக்குனர் கௌதமன் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று கூறியுள்ளார். அதில், "ஆதித்த கரிகாலன் பிராமணர்களால் கொல்லப்பட்டார்.

Famous director

ஆனால் பாண்டியர்களை குற்றம் சாட்டி பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருக்கிறது. இது தென்தமிழகத்திற்கும், வடதமிழகத்திற்கும் பிரச்சினையை ஏற்படுத்தும். படைப்பாளிகள் உண்மையை மட்டுமே பேச வேண்டும். வரலாற்றை மாற்றம் செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதனால் பெரும் போராட்டமே வெடிக்கும்" என்று எச்சரித்துள்ளார்.