குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஹன்சிகாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் அந்த பிரபல ஹீரோ. அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
தமிழ் திரையுலகில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல கதாநாயகியாக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
ஹன்சிகா, தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன் பிறகு எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, பிரியாணி, மான் கராத்தே, ரோமியோ ஜூலியட், சிங்கம் 3, 100 போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்தெ வெளியான திரைப்படங்கள் தோல்வியையே தழுவி வருகின்றன. இதனால் தமிழில் நடிப்பதற்கு பிரேக் எடுத்துக் கொண்ட ஹன்சிகா, தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழி சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இது போன்ற நிலையில், தமிழில் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா யூ ட்யுப் சேனலில் பேட்டி அளித்திருக்கிறார். பிரபல நடிகர் ஒருவர் ஹன்ஷிகாவை தொடர்ந்து தொல்லை செய்து வருவதாகவும், டேட்டிங் போகலாம் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அந்த நடிகர் யார் என்று ஹன்சிகா கூற மறுத்துவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஹன்சிகாவும், நடிகர் சிம்புவும் காதலித்து பிரேக்அப் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.