96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#JustIN: பல விருதுகளை குவித்த புகழ்பெற்ற 60 வயது நடிகர் உடல்நலக்குறைவால் மரணம்..! கண்ணீர் கடலில் திரையுலகம்..!
அமெரிக்காவில் புகழ்பெற்ற நடிகராக இருந்து வந்தவர் லென்ஸ் ரெட்டிக் (Lance Reddick). இவர் HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குற்றச்சம்பவங்கள் பின்னணி கொண்ட தொடரான The Wire-ல் காவல் அதிகாரியாக நடித்து பெருமளவில் கவனிக்கப்பட்டார்.
அதேபோல, ஹாலிவுட்டில் வெளியான காட்ஸில்லா, தி சேஜ், தி வே ஆப் வார், வொய்ட் ஹவுஸ் டவுன், ஜான் விக், காட்ஸில்லா Vs காங் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதற்காக பல விருதுகளும் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது 60 வயதாகும் நடிகர் லென்ஸ் ரெட்டிக் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். இவர் பெரும்பாலும் பாதுகாப்பு படை அதிகாரி சம்பந்தமான கதாபாத்திரத்திலேயே அதிகமாக நடித்திருப்பார்.