"ஒரு மார்புதானே கேன்சர், இன்னொன்றை காட்டு" - கேன்சரால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகையிடம் ஆபாச பேச்சு.. கண்ணீருடன் பேட்டி.!



famous-tamil-actress-open-speech

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட துணை நடிகைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், நலம் விசாரிப்பதுபோல நடித்து ஆபாச பேச்சில் ஈடுபட்டு மனரீதியான வலியை அதிகப்படுத்திய சோகம் நடந்துள்ளது.

தமிழில் வெளியான நாடோடிகள், தெனாவெட்டு, நான் மகான் அல்ல, கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி உட்பட படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமான நடிகை சிந்து. இவருக்கு அங்காடித்தெரு திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை தந்தது. 

அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரம் இன்று வரை பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. தற்போது மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நடிகை சிந்து, யூடுப் சேனல்கள் மூலமாக பலரிடமும் உதவி கேட்டு பேட்டி அளித்திருந்தார். 

tamil cinema

கடந்த 2021ம் ஆண்டு கொரோனா பாதிப்பின் போது மார்பக புற்றுநோய் இருப்பது சிந்துவால் உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று வரை அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் ரீதியாக பல துன்பங்களை அடைந்து படுத்த படுக்கையாகி இருக்கிறார். 

கோவை சரளா, மயில்சாமி, விவேக், மனோபாலா, ராகவா லாரன்ஸ், பிக் பாஸ் தனலட்சுமி உட்பட பலரும் அவருக்கு உதவி செய்தனர். ஆனால் நடிகர் சங்கத்திலிருந்து உதவி கிடைக்காத நிலையில், மருத்துவ ரீதியாக ஒரு உதவி தேவைப்படுவதால் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

tamil cinema

இந்த நிலையில், இரவு 12 மணிக்கு சிந்துவுக்கு போன் செய்த ஒரு நபர், நலம் விசாரிப்பது போல விசாரித்துவிட்டு வீடியோ கால் பேசலாமா? ஒரு மார்பில் தானே கேன்சர்.. மற்றொரு மார்பை காட்டு., ரூபாய் 5 லட்சம் தருகிறேன் என்று பேசி உள்ளார். இது குறித்து தகவலை அவர் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.