குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இதென்னடா குழப்பமா இருக்கு? சதீஷின் புதுவித சாகசத்தால் மண்டைகாய்ந்த ரசிகர்கள்! வீடியோ உள்ளே !!
தமிழ் சினிமாவில் விஜய், சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால், என பல பிரபலங்களுடன் இணைந்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சதீஷ். இவர் சினிமாவில் மட்டுமின்றி இயல்பாகவே அனைவரையும் கிண்டல் செய்து, சிரித்து பேசி எப்பொழுதும் ஜாலியாகவே இருக்கக் கூடியவர். மேலும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்.
இவர் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சினைகளுக்கு எதிராக வெளிப்படையாக சமூகவலைத்தள பக்கங்களில் கருத்துக்களை கூறி வருவார்..இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது சதிஷ் பிஸ்தா, ரங்கா ,கண்ணை நம்பாதே போன்ற பல படங்களில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Ennangada ore kozhappama irukku....!?!?!🤔🤔😬😬😁😁 pic.twitter.com/3LHFy7j3H0
— Sathish (@actorsathish) 20 March 2019
அதில் காற்றில் அந்தரத்தில் மிதப்பது போல அமர்ந்துள்ளார் . மேலும் அதில் என்னய்யா இது குழப்பமா இருக்கே எனவும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.