ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
லியோ வெற்றி விழா.! ஆனால் இப்படியொரு கண்டிஷனா.! செம சோகத்தில் ரசிகர்கள்!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளிவந்த திரைப்படம்தான் லியோ. இப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா, அர்ஜுன் போன்ற பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட்ட நிலையில் தற்போது 12 நாட்களில் 540 கோடி வசூல் ஈட்டி உள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தற்போது இப்படத்தின் வெற்றி விழாவை நடிகர் விஜய் தலைமையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிக்கல்களின் காரணத்தால் இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் பல நிபந்தனைகளின் அடிப்படையில் இவ்வெற்றி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 6000 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இன்று மாலை 6 மணி அளவில் லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற உள்ளது. இதில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை கொண்டாலும் இப்படத்தின் வெற்றி விழா நடைபெறுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறப்படுகிறது.