ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இலவச அனுமதி சீட்டு.! அயலான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அருமையான வாய்ப்பு.! படக்குழு அறிவிப்பு!!
மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். மேலும் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே. ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இதில் அதிகளவில் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 26 நடைபெறும் அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இலவச அனுமதி டிக்கெட் பெற ஒரு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அயலான் படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்திருப்பது யார்? என்ற கேள்விக்கு பதில் கூறுபவர்களுக்கு இலவச அனுமதி சீட்டு வழங்கப்படும் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பதில்களை அளித்து வருகின்றனர்.
You've seen our buddy from outer space but do you know who the voice behind our #Ayalaan is?👽🛸
— KJR Studios (@kjr_studios) December 12, 2023
Guess the answer and stand a chance to win passes for the Audio Launch happening on the 26th of December🎟️✨#AyalaanFromPongal🎇 #AyalaanFromSankranti🎆#Ayalaan @Siva_Kartikeyan… pic.twitter.com/zOLYnb4afh