96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இந்தியாவில் மட்டும் ரூ.47 கோடி வசூல்; மாஸ் காட்டிய காட்ஸில்லா காங் தி நியூ எம்பயர் திரைப்படம்.!
ஆடம் வின்கார்ட் இயக்கத்தில், தோஹா லிமிடெட், வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில், 135 அமெரிக்க மில்லியன் டாலர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் காட்ஸில்லா காங் தி நியூ எம்பயர் (Godzilla X Kong The New Empire).
படத்தின் இசையமைப்பு பணிகளை டாம் ஹோல்கன்போர்க்; அன்டோனியோ டி ஐயோரியோ ஆகியோர் கவனித்துக்கொண்டுள்ளனர். காட்ஸில்லா & காங் என தனித்தனி படங்கள் வெளியான நிலையில், இவற்றின் தொகுப்பாக காட்ஸில்லா வெர்சஸ் காங் உருவாகி இருக்கிறது.
இப்படம் மார்ச் 29, 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது. 64 நாடுகளில், உள்ளூர் மொழிகளில் வெளியான இப்படம் தற்போது வரை 194 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ.47 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது.