96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிரபல நடிகை வடிவுக்கரசிக்கு இப்படி ஒரு நிலைமையா? என்ன நடந்தது தெரியுமா?
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடித்துவருபவர் நடிகை வடிவுக்கரசி. பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும், குணசித்ர நடிகையாகவும், வில்லியாகவும் நடித்து அசத்தியுள்ளார் நடிகை வடிவுக்கரசி. நடிகர் சிவாஜி கணேசனுடன் நடித்த முதல் மரியாதை திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் என்றே கூறலாம்.
தற்போது சினிமாவில் அதிக வாய்ப்புகள் இல்லாததால் பல்வேறு சீரியல்களில் நடித்துவருகிறார் வடிவுக்கரசி. இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி வீட்டில் திடீரென ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ள இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடிவுக்கரசி வீடு இருக்கும் அதே பகுதியில் அவர் மகள் வீடும் உள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் கழித்து தனது வீட்டிற்கு திரும்பிய வடிவுக்கரசி தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது, அதிலிருந்த 8 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது குறித்து வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகன் பொலிஸ் புகார் கொடுத்த நிலையில் குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.