குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தலைவரு குடுத்து வச்சவருய்யா.. இரு பெண் போட்டியாளர்களுடன் வேற லெவல் குத்தாட்டம் போட்ட ஜி.பி முத்து! இணையத்தைக் கலக்கும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யங்களும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் 6வது சீசனில் துவக்கத்தில் 20 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அவர்களை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு மைனா நந்தினி வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இந்த சீசனில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டு அனைவராலும் கொண்டாடப்பட்டு வருபவர் டிக் டாக் மற்றும் சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமான ஜி.பி முத்து.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அன்றே இவருக்கென ஆர்மி உருவானது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் டான்ஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜி.பி முத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஹிட் பாடலுக்கு ரக்சிதா மற்றும் ஜனனியுடன் செம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thalaivan Splendid Performance 😂😂👌👌👌
— GP MUTHU ARMY (@Orathi_Official) October 20, 2022
#GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/pYhmNHfLkQ