96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நயன்தாரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! கெத்து காட்டும் லேடி சூப்பர் ஸ்டார்!!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நயன்தாரா மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் தனது 63ஆவது படமான ஐரா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அவர் பவானி மற்றும் யமுனா என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, கலையரசன், ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன், மாஸ்டர் அஸ்வந்த், கலைப்புலி லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி கே.எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் வரும் 28ம் தேதி ரிலீசாகவுள்ளது. அதுமட்டுமின்றி பெரிய கதாநாயகர்களின் படம் மட்டும் அதிகாலை சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்டிருந்த நிலையில் நயன்தாராவின் ஐரா படமும் அதிகாலை 5 மணிக்கு சிறப்புக்காட்சியாக திரையிடப்படவுள்ளது.
இதனால் நயன்தாரா ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.