96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடக்கொடுமையே..யோகிபாபு படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு! உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!! என்னனு பார்த்தீர்களா!!
கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி யோகிபாபு ஹீரோவாக நடித்து விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மண்டேலா. இத்திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக்கியுள்ளது. மண்டேலா படத்தை அறிமுக இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் சசிகாந்த் தயாரித்திருந்தார். இந்த படத்தில் யோகிபாபு முடி திருத்தும் தொழிலாளியாக நடித்துள்ளார்.
இந்தநிலையில் அண்மையில் தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்யவேண்டுமென சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில்,
மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் பிற்படுத்தபட்ட மதிப்புமிக்க சமூகம். ஆனால் மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை கழிவறையை சுத்தம் செய்வது, அவர்களை செருப்பால் அடிப்பது, காரில் ஏற அறுகதை இல்லை என கூறி காரின் பின்னே ஓடி வர சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
மேலும் படத்தில் உள்ள சில வசனங்கள் மருத்துவ சமுதாய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கி மறு தணிக்கை செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் உயர் நீதிமன்றம் திரைப்பட தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குனர் மடோனே அஸ்வின் ஆகியோர் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.