திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் ரஜினிகாந்தின் மீது வழக்குப்பதிவு செய்ய இந்து முன்னணி அமைப்பு கோரிக்கை; காரணம் இதுதான்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கடத்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில், ஜூன் 1ம் தேதி திருவண்ணாமலை கோவிலுக்கு அவர் சென்றிருந்தார்.
அப்போது, அம்மன் சன்னதி முன்பு அர்ச்சகர்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.
கோவிலுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர், கருவறை முன்பு ரஜினிகாந்த் போட்டோ எடுத்தது தவறானது.
அந்த புகைப்படத்தை எடுத்த நபரின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நடிகர் ரஜினிகாந்தின் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.