96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திரையுலகில் பேரதிர்ச்சி.! விமான விபத்தில் தன் இரு மகள்களுடன் உயிரிழந்த பிரபல நடிகர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
1994ம் ஆண்டு வெளியான சேவ்ட் பை தி பெல் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிறிஸ்டியன் ஆலிவர். இவர் 'தி குட் ஜெர்மன்', 'ஸ்பீட் ரேசர்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர். மேலும் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 51 வயது நிறைந்த அவர் தனது மகள்கள் 10 வயது நிறைந்த அகிக், 12 வயது மடிடா லிப்ஸர் ஆகியோருடன் புத்தாண்டை கொண்டாட கிழக்கு கரீபியனில் உள்ள பெக்கியாவிற்கு அருகிலுள்ள தனியார் தீவான பெட்டிட் நெவிஸ்க்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கோளாறு காரணமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் மற்றும் அவரது மகள்கள் மற்றும் விமானி ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பின்னர் தகவலறிந்த மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த நால்வரின் உடலையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.