96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லீக் நரம்பியல் நோயால் காலமானார்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஹாலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக 80 மற்றும் 90 களில் விளங்கிய நடிகை ஜெனிபர் லீக். இவருக்கு சோப் நடிகை என்ற பெயரும் உண்டு.
கடந்த 1968ம் ஆண்டு திரையில் அடியெடுத்து வைத்த நடிகை ஓய் எவர்ஸ், மைன் & எவர்ஸ் படத்தின் வாயிலாக நல்ல வரவேற்பு பெற்றார். அதனைத்தொடர்ந்து தொலைக்காட்சி நடிகையாகவும் வலம்வந்தார்.
இந்நிலையில், தற்போது 76 வயதாகும் நடிகை ஜெனிபர் லீக், நரம்பியல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டு புளோரிடாவில் இருக்கும் தனது வீட்டில் காலமானார்.
இந்த தகவலை அவரின் முன்னாள் கணவர் டிம் மெத்சன் உறுதி செய்துள்ளார். 47 ஆண்டு காலமாக இருவரும் ஒன்றாக வாழ்ந்ததையும் அவர் தனது இரங்கல் குறிப்பில் நினைவு கூர்ந்துள்ளார்.