மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இவங்களுமா.! திருமணமான சில மாதங்களில் சூப்பர் நியூஸ் சொன்ன இந்திரஜா.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் திரையுலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோசங்கர். சின்னத்திரையில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அவர் பின் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தி வருகிறார். ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. அவர் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இந்திரஜா-கார்த்திக் திருமணம்
மேலும் அவர் கார்த்தியின் விருமன் படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு கார்த்திக் என்பவருடன் கடந்த மார்ச் 24 ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஆட்டம்பாட்டம் என விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஈஸ்வரிக்கு என்ன ஆச்சு? ஆஸ்பிடலில் குடும்பம், வீட்டுக்கு அழைத்துச்செல்ல நடக்கும் போராட்டம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ வைரல்.!
மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை
இந்நிலையில் திருமணமான சில மாதங்களில் இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் நடைபெறவிருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இதுகுறித்த தகவல்கள் பரவி வந்த நிலையில் அதனை இந்திரஜாவும் அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் அவர்களை காண ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதையும் படிங்க: Siragadikka Aasai Promo: ரோகினியின் மகன் என்பதை அறிந்துகொண்ட கிரிஷ்; இறுதியில் ட்விஸ்ட்... பரபரப்பாகும் சிறகடிக்க ஆசை நெடுந்தொடர்..!