96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
SK15 ஹீரோயின் இரட்டை குழந்தையாக பிறந்தவரா! யார் அந்த அடுத்த குழந்தை?
இயக்குநர் பாலா இயக்கிய 'நாச்சியார்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை 'இவானா'. இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவானா நடிகர் சிவகார்த்திகேயனின் SK15 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'இரும்புத்திரை' பட இயக்குநர் பிஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் sk15 நடிக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில் இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் நடக்கவுள்ளதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் பாலா இயக்கிய 'நாச்சியார்' படத்தின் மூலம் அறிமுகமான 'இவானா' மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை இவானாவின் பிறந்தநாளான இன்று அப்படகுழிவினார் தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவானாவிற்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவரோ தன்னுடன் இரட்டை குழந்தையாக பிறந்த தன் சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதன் பிறகு தான் இவர்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள் என தெரிய வந்தது.
Happy birthday my Twin brother ❤️ pic.twitter.com/hgZycGgnXz
— Ivana (@_Ivana_official) February 25, 2019