ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நடிகர் எம்.எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகான மகளா! இப்போ என்ன வேலை செய்கிறார் தெரியுமா? செம ஷாக்கில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து தனது திறமையால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் எம். எஸ் பாஸ்கர். நாடகத்துறையில் இருந்து சினிமாவில் களமிறங்கிய அவர் விசு இயக்கிய திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, விஷால் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் எம். எஸ் பாஸ்கர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்துள்ளார். மேலும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் உள்ளார். நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர். ஐஸ்வர்யாவும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக உள்ளார். இவர் பல படங்களில் முன்னணி ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள Gunjan Saxena : The Kargil Girl என்ற திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. இந்த தமிழ்வெர்சனில் ஜான்வி கபூரின் கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா பாஸ்கர் குரல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.