நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
தளபதி விஜயின் 68-வது திரைப்படத்தின் பெயர் இதுவா.?
தளபதி விஜயை பொறுத்த வரையில் 2023-ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாகவே கருதப்பட்டது. அவர் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படமும் சரி, அதே போல இறுதியில் வெளியான லியோ திரைப்படமும் சரி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் அவருடைய 68-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் பிரேம்ஜி, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரசாந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். அதேபோல இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரு வேடங்களில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
அந்த இரு வேடங்களில் ஒரு வேடத்தில் 25 வயது இளைஞனாக விஜயை காட்ட வேண்டும் என்பதற்காக, ஒரு புதிய தொழில்நுட்பத்தை இயக்குனர் வெங்கட் பிரபு பயன்படுத்தியிருக்கிறார். விஜயின் 68-வது திரைப்படத்திற்கு 3 தலைப்புகளை தயார் செய்திருக்கிறாராம் இயக்குனர் வெங்கட் பிரபு. அதில் ஒரு தலைப்பு தான் பாஸ் என சொல்லப்படுகிறது. இந்த கதைக்கு பாஸ் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதால், இதைத்தான் புத்தாண்டு தினத்தில் அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.