96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தளபதியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை.! படக்குழுவினர் அதிர்ச்சி.!
நடிகர் விஜய் வெங்கட் பிரபு உள்ளிட்டோரின் கூட்டணியில் நடிகர் விஜய்யின் 68வது திரைப்படம் தாய்லாந்து, சென்னை போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் என்டேர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில், மைக் மோகன், வி.டி.வி கணேஷ், ஜெயராம், லைலா, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அத்துடன் தளபதி விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை இவானாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. லவ் டுடே திரைப்படத்திற்குப் பின்னர் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவே இது கருதப்பட்டது.ஆனாலும், அந்த திரைப்படத்தில் நடிகை இவனா நடிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. படக்குழு சார்பாக அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு இவானாவை அழைத்தது உண்மைதான்.
ஆனாலும் அந்த திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று இவானா மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் தொடர்ந்து அனைத்து திரைப்படங்களிலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டி வரலாம் என்பதால், இவானா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.