96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வாவ்.. இதுவே சூப்பரா இருக்கே! முடியை கலர் செய்வதற்கு முன் பிக்பாஸ் ஐக்கி பெர்ரி எப்படியிருக்காங்க பார்த்தீங்களா!!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த பிக்பாஸ் சீசனில் வெவ்வேறு வித்தியாசமான துறையை சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஐக்கி பெர்ரி. இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் முடி எல்லாம் கலர் செய்து பார்ப்பதற்கு ஃபாரின் ரிட்டன் போல உள்ளார். ஐக்கி பெர்ரி மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக உள்ளார். அதுமட்டுமின்றி அவர் ராப் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டுள்ளார். மேலும் வெளிநாடுகளிலும் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் தனது உடை, நடை, பாவனை எல்லாம் மாற்றி வெளிநாட்டு பெண்ணாகவே மாறியுள்ளார். இந்த நிலையில் ஐக்கி பெர்ரி தனது முடியை கலர் செய்வதற்க்கு முன் கருப்பு நிற முடியில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் ஐக்கி பெர்ரியா இது! இப்படி இருப்பதே சூப்பரா இருக்கே! எனக் கூறி வருகின்றனர்.