96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆள் அடையாளமே தெரியாமல், இது என்ன கோமாளி மாதிரி..வைரலாகும் ஜெயம் ரவியின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த ஜெயம் ரவி தற்போது தனது 24 வது படமாக பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் உருவாகும் கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் இதற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையமாகக் கொண்டு காமெடியாக உருவாக்கப்படும் இப்படத்தில் ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் தற்பொழுது கோமாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது அதில் தனது உடல் எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ஜெயம் ரவியை கண்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Happy to share #ComaliFirstLook 😬 God bless 👍🏼👍🏼 @MSKajalAggarwal @SamyukthaHegde @Pradeeponelife |@hiphoptamizha | @PradeepERagav @SonyMusicSouth @VelsFilmIntl | @shiyamjack @DoneChannel1 @vijaytelevision @agscinemas pic.twitter.com/5jPUw5UkAA
— Jayam Ravi (@actor_jayamravi) 18 May 2019